கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு: உயிரிழந்த நபருக்கு பொதுமன்னிப்பு வழங்க பிரதமர் முடிவு...
கனடா நாட்டு வரலாற்றில் முதல் முறையாக குற்றம் செய்யாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த ஓரினச்சேர்க்கை நபருக்கு பொதுமன்னிப்பு வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா நாட்டில் கடந்த காலங்களில் ஓரினச்சேர்க்கை நபர்களுக்கு(Gay& Lesbian) அந்நாட்டு சட்டம் கடுமையான தண்டனைகளை விதித்தது.
கடந்த 1965ம் ஆண்டில் கல்கேரி நகரின் ஒரு பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணத்தை பொலிசார் விசாரணை செய்து வரும்போது தீவிபத்திற்கு தொடர்பில்லாத George Klippert என்ற நபர் தானாக முன்வந்து பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது, ‘தீவிபத்திற்கு நான் காரணம் இல்லை. ஆனால், தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும், 4 ஆண்களுடன் தனக்கு பாலியல் உறவு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
இதனால் எந்த குற்றமும் செய்யாத ஜோர்ஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு கல்கேரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு பின்னர், தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையான பியரி ட்ரூடோ அப்போது நீதித்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தார்.
அதாவது. ’21 வயது நிரம்பிய ஆண்கள் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதை அரசு தண்டிக்க கூடாது’ என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார்.
இதன் விளைவாக, ஜோர்ஜ் சுமார் 5 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு 1971ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தனக்கு 69 வயது ஆனபோது 1996ம் ஆண்டு உயிரிழந்தார்.
சட்டத்திற்கு முரணான இந்த விவகாரம் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் பேட்டியளித்தபோது, ‘கனடா அரசாங்கம் அனைத்து குடிமக்களையும் சட்டத்திற்கு முன்னால் சமமாகவே பார்க்கிறது.
கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறால், எந்த குற்றமும் செய்யாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாரான ஜோர்ஜ்க்கு பொதுமன்னிப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு கனடாவில் உள்ள ஓரினச்சேர்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு: உயிரிழந்த நபருக்கு பொதுமன்னிப்பு வழங்க பிரதமர் முடிவு...
Reviewed by Author
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment