அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க பிரித்தானிய மகாராணி மறுப்பு? வெளியான பரபரப்பு தகவல்கள்....
பிரித்தானிய நாட்டிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபரான ஒபாமாவை சந்திக்க பிரித்தானிய மகாராணி மறுப்பு தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய கூட்டமைப்பில் உறுப்பினராக பிரித்தானிய நீடிப்பதா அல்லது தனியாக பிரிந்து செல்வதா என்பது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் யூலை மாதம் நடைபெற உள்ளது.
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் ‘ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரித்தானிய தொடர்ந்து நீடிக்க வேண்டும்’ என்பதையே விரும்புகிறார்.
இதை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ‘ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரித்தானியா தொடர்ந்து நீடிப்பது தான் சிறந்த முடிவு’ எனக்கூறிவருகிறார்.
இது தொடர்பாக அடுத்தமாதம் பிரித்தானிய நாட்டிற்கு ஒபாமா வருகை தந்து பிரதமரை நேரில் சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவிற்கு வருகை தரும் ஒபாமாவை சந்திக்க அந்நாட்டு மகாராணியான இரண்டாம் எலிசபெத் மறுப்பு தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனெனில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகி பிரித்தானியா தனியாக செயல்பட வேண்டும் என்பதையே மகாராணி விரும்புவதால், இது தொடர்பாக எதிர்க் கருத்து கூற வரும் ஒபாமாவை சந்திக்க மகாராணி விரும்பவில்லை என தெரிகிறது.
மேலும், ஐரோப்பாவில் நீடிப்பதால் பிரித்தானியாவிற்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பொதுமக்களிடம் பேச வேண்டாம் எனவும் ஒபாமாவுக்கு அரண்மனை அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க பிரித்தானிய மகாராணி மறுப்பு? வெளியான பரபரப்பு தகவல்கள்....
Reviewed by Author
on
March 18, 2016
Rating:
Reviewed by Author
on
March 18, 2016
Rating:


No comments:
Post a Comment