மின்சாரசபை முகாமைத்துவத்தை எச்சரித்தார் .....பிரதமர் ரணில்...
இலங்கை மின்சாரசபையின் முகாமைத்துவத்தினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக எச்சரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மின்சார தடைக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதற்கான அறிக்கையை ஜெர்மனின் மஸ்சினென்பாப்ரிக் ரெய்ன்ஹூசென் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது.
பியகம மற்றும் கொட்டுகொட ஆகிய மின்சார உப நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களை அடுத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இதேவேளை மின்சார சபையின் உயரதிகாரிகள், இலகுவான வழியில் தப்பிக்க முயற்சிக்காமல் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
மின்சாரசபை முகாமைத்துவத்தை எச்சரித்தார் .....பிரதமர் ரணில்...
Reviewed by Author
on
March 31, 2016
Rating:

No comments:
Post a Comment