வாழும் தெய்வங்களான அன்னையரை போற்றுவோம்! இன்று அன்னையர் தினம்...
அன்னையர்களை ஆதரிக்கும் வகையில் பிரித்தானியா இன்று மிக சிறப்பாக அன்னையர் தினத்தை கொண்டாடி வருகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த காலகட்டத்தில் முதன் முறையாக தாய்மையை ஆதரிப்பது குறித்து அந்த போரில் கலந்து கொண்ட மகன்களின் தாய்மார்களிடையே கருத்துரு உருவானது.
மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக கொண்டாட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் 1914 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார்.
இந்த உத்தரவு முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. யுத்தத்தின் பலனாய் அப்போது பல பெண்கள் தங்களது மகன்களையோ துணைகளையோ இழந்து தனியாகவே தங்கள் குழந்தைகளை பேணும் நிலைக்கு நாளடைவில் தள்ளப்பட்டனர்.
உலகின் பெருவாரியான நாடுகள் இன்னமும் அமெரிக்கர்கள் கொண்டாடும் தினத்தையே அன்னையர் தினமாக கடைபிடித்து வருகின்றனர். பிரித்தானியர்கள் கடைபிடித்து வரும் அன்னையர் தின நாளானது, 16 ஆம் நூற்றாண்டில் கடைபிடிக்கப்பட்ட பேராலயம் சந்தித்தல் எனும் சடங்கில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது.
பேராலயம் என்பது தவக்காலத்தின் நான்காவது ஞாயிறாகும். இந்த நாளில்தான் உள்ளூர் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.
1920 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் கான்ஸ்டன்ஸ் ஸ்மித் என்பவர் அமெரிக்க அன்னையர் தினத்தை முன்மாதிரியாக கொண்டு கையேடு ஒன்றை வெளியிட்டார்.
அந்த நாளினை பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து கிருத்துவ கோயில் கிளைப்பிரிவும் மற்றும் பேரரசின் அனைத்து நாடுகளும் அன்னையர்களை சிறப்பிக்கும் நாளாக கொண்டாடியுள்ளனர்.
இந்த நாளினை பொதுவாக அன்னையர் தினமாக கொண்டாடி வருகின்றனர், ஆனால் தாய்மையின் ஞாயிறாகவே அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது.
அன்னையர் தினத்தன்று பிரித்தானிய மக்கள் தங்கள் அன்னையருக்கு பழவகைகளாலான கேக் (Simnel Cake) தயார் செய்து வழங்குவது வழக்கம்.
காரணம் தவக்காலத்தின் மத்தியில் இந்த தினமானது கொண்டாடப்படுவதால் தவக்காலத்தின் விரதங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதனால் இந்த தினத்தை பாரம்பரியமாக புத்துணர்ச்சி ஞாயிறு எனவும் அழைக்கப்படுகின்றது.
பரபரப்பான இந்த காலகட்டத்தில் அன்னையருக்கு பூக்கள் அல்லது சொக்லேட் வகைகளை பரிசாக அளிப்பதே வழக்கமாகி வருகிறது.
உங்கள் அம்மா உலகின் மிகச்சிறந்த அம்மாவா? இதோ சுவாரசியான உண்மைகள்
* உங்கள் அம்மாவின் நகைச்சுவை உணர்வே பெஸ்ட், உங்களை உங்கள் குடும்பத்தினரை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்
* உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் குடும்பத்தைவிட்டு விலகி இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள்
* பிறரை மதிக்க கற்றுக் கொண்டிரூப்பீர்கள், ஒருபோதும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்க நினைக்கமாட்டீர்கள்
* ஒரு குழந்தையை போல் உங்கள் மனதில் புன்னகை நிறைந்திருக்கும், குழந்தை பருவ நினைவுகளை அடிக்கடி அசைபோட்டுக் கொள்வீர்கள்
* தனிமையாக செயல்பட முழுமையான முழு சுதந்திரம் உங்களுக்கு உண்டு
* உங்கள் அம்மா உங்களிடம் மிக நேர்மையான நபராக இருப்பார்
* உங்கள் அம்மா கைப்பட சமைத்த உணவே தேவாமிர்தமாக இருக்கும்
* உங்களின் திறமைகளை தட்டியெழுப்பிய நபர் உங்கள் அம்மா மட்டுமே, உங்கள் திறமைகளுக்கு அதிக மதிப்பளிக்க கூடிய நபரும் அவராகவே இருப்பார்
* உங்களது அம்மாவின் நினைவலைகள் என்றுமே மறக்க முடியாத ஒன்றாகும்
* உங்களை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் உங்களது அம்மாவுக்கு அலாதி பிரியம் தான்
* நீங்கள் பிறந்த தினத்திலிருந்து பட்டம் பெற்ற நாள் வரை.. என்றைய தினமாக இருப்பினும் வாழ்க்கையின் மிகச்சிறந்த நிகழ்வுகளை/நினைவுகளை மறக்காத நபர் உங்கள் அம்மா மட்டுமே
* உங்களுக்கு எதையும் விட்டுக் கொடுக்கும் நபரும் உங்கள் அம்மா மட்டுமே
* அனைவரையும் மன்னிக்க கற்றுக் கொள்வீர்கள்
* கஷ்டமான சூழ்நிலைகளின் போது உங்கள் அம்மாவின் ஆறுதலான வார்த்தைகளே போதும்
* உங்களின் மிகச்சிறந்த நண்பன் உங்கள் அம்மா மட்டுமே
வாழும் தெய்வங்களான அன்னையரை போற்றுவோம்! இன்று அன்னையர் தினம்...
Reviewed by Author
on
March 07, 2016
Rating:
Reviewed by Author
on
March 07, 2016
Rating:




No comments:
Post a Comment