இன்றைய வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கப் போகின்ற அணி எது? AsiaCupT20 இலங்கை? இந்தியா?
இன்றைய வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கப் போகின்ற அணி எது? #AsiaCupT20
இலங்கை? இந்தியா?
ஆசியக் கிண்ணத்தின் அதிமுக்கிய போட்டி, இன்றிரவு 7 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி)
கட்டாயம் இலங்கை சிங்கங்கள் வெல்ல வேண்டிய போட்டியா இது அமைந்துள்ளது. ஏன் எனில் பங்களாதேஷ் அணியுடன் தோல்வியும் காயம் காரணமாக மிரட்டும் வேகப்பந்து வீரர் மலிங்க காயம் காரணமாக ஓய்வில் இருப்பதும் சவாலான போட்டியாகாவே இன்றைய போட்டி அமையும்....
ஆசியக்கோப்பை கிரிக்கெட் இன்றைய போட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்த்து விளையாடுகிறது. மிர்பூரில் நடைபெறும் போட்டி இரவு ஏழு மணியளவில் தொடங்குகிறது.
தோனி தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியுள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்திய அணியுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இலங்கை அணி களமிறங்குகிறது. அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதிசெய்து கொள்ளும்.
இன்றைய வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கப் போகின்ற அணி எது? AsiaCupT20 இலங்கை? இந்தியா?
Reviewed by Author
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment