மன்னார் புதுவெளிச் சந்தியில் பஸ் தரிப்பிடம் (நிழற்குடை) அமைக்கப்பட வேண்டும்.
முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட   புதுவெளிக்கிராமத்தில் இருந்து வரும் எம்.சி.எ.கபூர் வீதி சிலாவத்துறை
முருங்கன் பிரதான வீதியுடன் இணைகிறது.இலந்தைக் குளம், மணக்குளம்,பண்டாரவெளி,மேய்த்தன்வெளி,அளவக்கைச் சிறுக்குளம் போன்ற கிராமங்களை இணைக்கும் வீதியும் கபூர் வீதியுடன் இணைகிறது.மேற்சொல்லப்பட்ட கிராம மக்கள் அனைவரும் பயணத்திற்காக இச்சந்தியையே பயன்படுத்துகின்றனர்.இங்கு வரும் பயணிகள் வெயில். மழை போன்றவற்றால்பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, இம்மக்களின் நன்மைகருதி ஒரு நிழற்குடையை அமைக்க வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்அவர்களும் ,முசலிப் பிரதேசசபை ஆணையாளரும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
மன்னார் புதுவெளிச் சந்தியில் பஸ் தரிப்பிடம் (நிழற்குடை) அமைக்கப்பட வேண்டும்.
 Reviewed by NEWMANNAR
        on 
        
March 27, 2016
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 27, 2016
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment