அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வங்காலை பொலிஸார் மது போதையில் அடாவடி! 16 வயது மாணவி மீது தாக்குதல்

மன்னார் வங்காலை அக்கினேஸ்புரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று மதியம் மது போதையில் சிவில் உடையில் சென்ற இரண்டு பொலிஸார் பாடசாலை மாணவி ஒருவர் மீது தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மாணவி சுய நினைவு இழந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பிர் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் வங்காலை அக்கினேஸ்புரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில காலங்களாக சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

எனினும் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த விட்டில் சட்டவிரோதமான முறையில் மதுபானப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் குறித்த வீட்டில் 44 வயதுடைய தாய் ஒருவர் மதிய உணவை உட்கொண்டுக்கொண்டிருந்த நிலையில் வங்காலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார் சிவில் உடையில் மது போதையில் குறித்த வீட்டினுள் நுழைந்து குறித்த தாயை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதன் போது தாயை சிவில் உடையில் மது போதையில் வந்த பொலிஸார் கண் மூடித்தனமாக தாக்குவதை கண்ட 16 வயதுடைய குறித்த மாணவி ஏன் எனது அம்மாவை அடிக்கின்றீர்கள் என கேட்டுள்ளார்.

இதன் போது பொலிஸார் இருவரும் அம் மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.பின் உறவினர்களின் உதவியுடன் தாயும் மகளும், வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் போது சிவில் உடையில் மது போதையில் தாக்குதல்களை மேற்கொண்ட இரு பொலிஸாரும் வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு உடன் சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த தாயை மீண்டும் தாக்கியுள்ளனர்.

இதேவேளை மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லக்கூட பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.

எனினும் மாணவியின் உறவினர்கள் பொலிஸாரிடம் கெஞ்சிய நிலையில் பொலிஸார் மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் வங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை மாணவியின் தாயரை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இது வரை விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்கச் சென்ற 18 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் குறித்த இனைஞன் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் அவ்வீட்டில் எவ்வித சட்டவிரேதமான செயற்பாடுகள் இடம் பெற்றிருந்தாலும் சிவில் உடையில் மது போதையுடன் பொலிஸார் வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் எனவும்,

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பொலிஸாருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மன்னாரில் வங்காலை பொலிஸார் மது போதையில் அடாவடி! 16 வயது மாணவி மீது தாக்குதல் Reviewed by NEWMANNAR on April 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.