அண்மைய செய்திகள்

recent
-

2016 ம் ஆண்டு சித்திரை புத்தாண்டு : துன்முகி வருட பலாபலன்கள்....


சித்தி + திரை சித்திரை  வெற்றி போர்வை.

வாழ்ந்து பார்க்கத்தான் இந்த வாழ்க்கை ஜெயித்துக்காட்டத்தான் இந்தபோராட்டம்.

கற்றுக் கொள்வதற்குத்தான் இந்த பாடம். வெற்றி போர்வையோடு ஆரம்பிக்கும் இப்புத்தாண்டு.!

2016 ஆண்டு புதன் கிழமை அன்றைய தினம் மாலை 07.48 மணிக்கு சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பிரவேசிக்கிறார். 60 ஆண்டுகளை கொண்ட சித்திரை மாதம் 01 நாளை கொண்டு தான் பஞ்சாங்கம் கணிக்கபடுகிறது அதில்  உள்ள வருடங்களில் மன்மத வருடம் முடிந்து  துன்முகி வருடம் பிறக்கிறது. துன்முகி என்றவுடன் துன்பங்கள் நிறைந்த வருட என்று என்னி விட வேண்டாம்.

( துன்பங்கள் நீங்கி ) துன்பங்கள் நீக்கிய வருடமாகவே என்னுவோம் நல்லதை எண்ணுவோம் நல்லதே நடக்கும். ஆகவே கிரகங்களை பொருத்தே பலன்கள் மாறுபடும். இந்த வருடம் மிதுன ராசியில் புணர்பூச நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் வருடம் பிற்பதால் நன்மைகளே ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

‘மிக்கான துன்முகியில் வெள்ளாமை அருமே தொக்க மழை பொழியும்;’’ என்ற ஜோதிடப்பாடலும் உண்டு. அதாவது காலமழை மாரி பெய்யும் விளைச்சல சில பாதிக்கபட்டாலும் பஞ்சம் வந்து விடாது.

லக்கினத்திற்கு 02ல் சனி செவ்வாய் 05ல் கேது 06ல் உச்சம்பெற்ற சுக்கிரன் 07ல் சூரியன் புதன் 09ல் சந்திரன்;  லாபத்தில் குரு ராகு ஆகவே லாபமே.

நாட்டில்  தெய்வ வழிபாடு அதிகரிக்கும் மகிழச்சியுடன் மன நிறைவு கூடும் வகையில் மக்களுக்கு வாழ்க்கையில் மாற்றஙகள் ஏற்படும். அந்நிய நாட்டுமக்கள் நம்மை கண்டு ஆச்சர்யம் படும் வகையில் நம் நாட்டில் கட்சி கூட்டணி மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

சனி செவ்வாய் 05ல் இருப்பதால் உலகில் பல இடங்களில் பூகம்பம் ஏற்படலாம் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால் கனமழை பெய்யும் . பெண்களுக்கு யோகம் உண்டாகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர். ஆனாலும் பொன்னான நாளான புதன் கிழமை சுக்கிர ஹோரையில் புத்தாண்டு பிறப்பதால் பெறுமையே . மக்கள் அனைவருக்கும் பெறுமையான பொன்னான சிறப்பான  நாளாக அமையும்.

புணர்பூச நட்சத்திரம் குருவின்  நட்சத்திரம் ஆகையால் சிவ வழிபாடு அம்மன் தட்சிணாமூர்த்தி ஆஞ்சனேயா வழிபாடுகள் செய்வது சிறப்பு.

கையில் பணம் தங்கவில்லையே என்று கூறுபவர்கள் 15.04.2016  அல்லது 15.04.2016 அன்று 50.00 ரூபாய் நோட்டுக்கள் மூலம் தன ஆகர்ஷனம் செய்வது மிகச்சிறப்பு. விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

விசு புண்ணிய காலம் 

காலை 06.45. முதல 10.30.  மாலை 3.30 முதல் 04.33 வரை

மருத்து நீர் இப்புண்ணிய காலத்தில் எல்லோரும் சங்கற்ப பூர்வமாக இறைவனை பிரார்தித்து தலையில் வேப்பிலையும் காலில் கொன்றையிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராடலாம்.

அணிய வேண்டிய ஆடைகள்

இவ்வருடம் வெள்ளை பச்சை கலந்த பச்சை உடைகள் பச்சை வஸ்திரம் அணிவது சிறப்பு.

அணியவேண்டி இரத்தினஙகள் :மரகத பச்சை  பச்சைசேர்க்கோன் வைரம் வைட்சேர்க்கோன்

உண்ண வேண்டிய உணவுகள் : மோதகம்,வடை,நெல்லிக்கனி துவையல்,மாதுளம்பூ,அறுசுவை உணவுகள்,

இனி ஒவ்வொரு ராசிகளுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம் - தைரியத்தால் முன்னேற்றம்

ரிஷபம் - கடின உழைப்பால வெற்றி

மிதுனம் - புதிய பாதையால் சிறப்பு

கடகம் - போராடி பலன் கிடைக்கும்

சிம்மம் - தடுமாரி கரையேரலாம்

கன்னி - நிதானித்தால் நினைத்தை சாதிக்கலாம் 

துலாம் - மனம் நிறைவடையும

விருச்சிகம் - புத்துணர்ச்சி ஏற்படும்

தனுசு - திறமைகள் வெளிப்படும்

மகரம் - தன்னம்பிக்கை ஏற்படும்

கும்பம்  - தடைகளாய் இருந்தது பனியாய் உருகும்

மீனம்  - திட்டங்கள் இட்டவை நிறைவேறும்

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்

புனர்பூசம்

மிருகசிரிடம் 3…4 பாதங்கள்

திருவாதிரை

விசாகம் 4ம் பாதம்

அனுசம்

கேட்டை

தீமைகள் நீஙகி  நன்மைகள் பெருக நல் வாழத்துக்கள்.!

பிரபல வாஸ்த்து ஜோதிட நிபுணர் 

மருதை பத்மராஜன்


2016 ம் ஆண்டு சித்திரை புத்தாண்டு : துன்முகி வருட பலாபலன்கள்.... Reviewed by Author on April 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.