மன்னாரில் மீண்டும் சோதனைச்சாவடி: பயணிகள் அவதி....
மன்னாரில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளமை மற்றும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து நேற்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளமையை அடுத்து மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் A14 மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக சோதனைச் சாவடி பொலிசாரால் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்று அமைக்கப்பட்ட குறித்த சோதனைச் சாவடியூடாக செல்லும் வாகனங்கள் சேதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது.
இதனால் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ். சாவகச்சேரி மற்றும் மன்னார் இலுப்பக்கடவை போன்ற இடங்களில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையை அடுத்து மன்னாரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடி தொடர்பில் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
யுத்த காலத்தில் இருந்த சோதனை கெடுபிடி மீண்டும் ஆரம்பித்துவிடுமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
மன்னாரில் மீண்டும் சோதனைச்சாவடி: பயணிகள் அவதி....
Reviewed by Author
on
April 01, 2016
Rating:

No comments:
Post a Comment