தெருவோரம் வியாபாரம் செய்வோரால் எமது வியாபாரமும் வருமானமும் கேள்விக்குறியாகியுள்ளது….சட்ட நடவடிக்கை நகரசபைச்செயலாளர்
மன்னார் வைத்தியசாலை சந்தியில் தெருவோரம் வியாபாரம் செய்வோரால் எமது வியாபாரமும் வருமானமும் கேள்விக்குறியாகியுள்ளது….
வர்த்தகர்களின் முறைப்பாட்டிற்கும் கடிதத்திற்கும் பதிலை பெற்றுக்கொள்வதோடு தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் நோக்கில் மன்னார் நகரசபைச்செயலாளர் திரு.எக்ஸ்.எல்.றெனால்டோ அவர்களிடம் முறைப்பாட்டை முன்வைத்தபோது…….
மன்னார் வைத்தியசாலை சந்தியில் தெருவோர வியாபாரிகளினால் தங்களுக்கு வருமானம் மற்றும் வியாபாரத்தில் வீழ்ச்சி என்னும் முறைப்பாடுகள் வந்துள்ளதுதான் இது நீண்டகாலப்பிரச்சினை….
இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டேன் வியாபாரத்தடையென விளம்பரப்பலகையும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தும் அதையும் மீறி வியாபராத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பல முறை பொருட்களை பறிமுதல் செய்தும் வியாபாரிகளை கண்டித்தும் உள்ளோம.
இருப்பினும் மீண்டும் மீண்டும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்வதால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வினை பெறுவதற்கான முயற்சிகளை நடைமுறைப்படுத்தவுள்ளேன் வியாபாரம் செய்ய தடைசெய்யப்பட்ட பகுதியில் வியாபாரம் செய்பவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதோடு அவர்களின் உடைமைகளும் பறிமுதல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் அத்தோடு மன்னாரில் இயங்குகின்ற பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் முறைப்படி பதிவு பெறவில்லை பதிவு பெறாத வர்த்தக நிலையங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் பதிவு பெறாத வர்த்தக நிலையங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.(குறிப்பு-பழக்கடை-பலசரக்குகடை-மரக்கறிகடை-என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத்தான் பதிவு மேற்கொள்ளவேண்டும் என்பது தான் சட்டம் புரிந்து கொள்ளுங்கள்)
வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கடிதம்........
நியூமன்னார் இணையம்
இணைப்பாளருக்கு……
வைத்தியசாலை சந்தியில் கடை வைத்திருக்கும் வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் அறியத்தருவது என்ன வென்றால் பிரதேச சபை மன்னார் நகர சபைக்கு உட்பட்டு அதன் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு மாதாந்த வரிப்பணத்தினை சரியான முறையில் செலுத்தி வருகின்றோம். அதன் அடிப்படையில் எங்களுக்கு ஏற்படும் சிறுகஸ்ரங்கள் இடையூறுகளை உதாரணமாக வாடகைக்கடை மின்கட்டணம் அரசவரி இதை அனைத்தையும் செலுத்தி நாங்கள் வியாபாரம் செய்து வருகின்றோம். இது எதுவும் செலுத்தாமல் வைத்தியசாலை சந்தியில் சுற்றி வர உள்ள இடங்களில் பிரதேச சபையினால் வியாபாரம் செய்யத் தடையென விளம்பரப்பலகை இருக்கும் குறிப்பிடப்படும் இந்த வைத்திய சாலைச்சந்தியில் தான் இந்த வெளிமாவட்டத்தில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் வந்து வண்டில்கள் வாகனங்களில் மேசையில் தெருவோரங்களில் சந்தியில் படங்கு தரப்பாள் விரித்து வியாபாரம் செய்து வருகின்றார்கள்.
இவர்களின் வியாபார நடவடிக்கையானது காலை7-00 மணியில் இருந்து மாலை 8-00 மணி தாண்டியும் தொடர்கின்றது. பிரதேச சபை நகர சபையினரின் சட்டதிட்டங்களுகளுக்கு கட்டுப்பட்டு மரியாதைளித்து வியாபாரம் செய்யும் நாங்கள் இந்த வெளிமாவட்ட தெருவோர வியாபாரிகளின் வருகையாலும் வியாபாரத்தில் ஈடுபடுவதாலும் நாங்கள் எந்த விதமான வருமானமும் இன்றி வரிகட்டவோ வாடகை மின்சார பணங்களை செலுத்தவோ முடியாமலே திணறுகின்றோம்.
இவ்விடையம் சம்மந்தமாக நகரசபை உயர் அதிகாரிக்கும் பிரதேச சபை அதிகாரிக்கும் பல தடவைகள் வாய்மூலமும் கடிதம் மூலமும் கொடுத்தும் எந்தவிதமான சட்டபூர்வமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை அசமந்தப்போக்ககையும் அலட்சியத்தன்மையினையும் எமக்கு தீர்வாகத்தந்தார்கள்.
இந்த நிலை மன்னார் நகரப்பகுதிக்குள் பஜார் இல்லை அங்கு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிர்வாகம் செய்யும் இவர்கள் ஏன் வைத்திய சாலைச்சந்தியில் மட்டும் ஏன் நிர்வாகம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை நகர சபையினதும் பிரதேச சபையினதும் நம்பிக்கை இழந்த நாங்கள் மன்னார் இணையமான நெறஅயnயெச.உழஅ மூலமாக எமக்கு தீர்க்கமான உறுதியான தெளிவான முடிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் ஒப்படைக்கின்றோம்.

தெருவோரம் வியாபாரம் செய்வோரால் எமது வியாபாரமும் வருமானமும் கேள்விக்குறியாகியுள்ளது….சட்ட நடவடிக்கை நகரசபைச்செயலாளர்
Reviewed by Author
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment