போராளிகளின் மரணங்கள் சந்தேகத்திற்குரியது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் மரணமடையும் நிகழ்வுகள் “திட்டமிட்ட அழிப்பா” என்ற சந்தேகத்திற்குரியது என தீபச்செல்வன் குறிப்பிடுகிறார்.
தமிழீழ அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரணத்தின் பின்னர் அண்மையில் கிளிநொச்சியில் மற்றுமொரு முன்னாள் போராளி புற்றுநோயால் இறந்திருப்பதாகவும் தன்னுடைய முகப்புத்தக நிலைத்தவல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வுக்குப் பின்னர் இறந்த முன்னாள் புலிகளில் தமிழினி அக்கா 99ஆவது நபர் என்று பரணி கிருஷ்ணரஜனி எழுதியிருப்பதாகவும்,
அண்மையில் கிளிநொச்சியில் புனர்வாழ்வு என்றழைக்கப்பட்ட தடுப்புச் சிறையிலிருந்து வந்த சிவகௌரி என்ற முன்னாள் போராளியும் புற்று நோயால் இறந்தது கிளிநொச்சியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் அந்த நிலைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினியின் மரண நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த நாளில்கூட புதுக்குடியிருப்பில் ஒரு முன்னாள் போராளி திடீரென மயங்கி விழுந்த நிலையில் இறந்தார் என்றும் பல முன்னாள் போராளிகள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு போராளிகளின் மரணங்கள் நிகழும்போது “இலங்கை அரசு, நல்ல அரசு. அப்படி ஒன்றையும் செய்யாது“ என்று சிலர் நற்சான்றிதழை கொடுப்பதன் நோக்கம்தான் என்ன?
என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழர் மீதான இன அழிப்பு யுத்தத்தை இலங்கை அரசு எப்படி வடிவமைந்திருந்தது என்பதை நுணுகிப் பார்த்தால் தமிழரை அழிக்க, அது, எதை? எப்படி? வேண்டுமானாலும் செய்யும் என்பதை உணரலாம் அவரது நிலைத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
போராளிகளின் மரணங்கள் சந்தேகத்திற்குரியது!
Reviewed by NEWMANNAR
on
April 15, 2016
Rating:

No comments:
Post a Comment