அண்மைய செய்திகள்

recent
-

ஈழக்கொள்கை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


முப்பதாண்டு கால கொடிய யுத்தத்தினை இராணுவத்தினரின் துப்பாக்கியால் முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், ஈழக்கொள்கையை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின், தொகுதி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

கடல் கடந்து வாழும் LTTE யினரின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு நாம் மறந்து போயுள்ளோம். எவ்வாறாயினும், யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

அவற்றினை நிறைவேற்றாது போனால் நாட்டில் மீண்டுமொரு முறை யுத்தம் ஏற்படுவதனை எவராலும் தடுக்க முடியாது போகும்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் குறித்து 2014ஆம் ஆண்டே பேசப்பட்டது.

இதன் போது அரசியல், பொருளாதாரம், கட்சி ஆகியவற்றின் மறுசீரமைப்பை வலியுறுத்தி எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தேன்.

அத்துடன், அனைத்து தலைவர்களிடமும் குறித்த ஆவணத்தை கையளித்து, தேர்தலை நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய போது, வேறு கட்சியின் உறுப்பினராக ஒரு போதும் வெளியேறவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளராக, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 49 கட்சி மற்றும் அமைப்புகளுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டேன்.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படவோ, அனைத்து சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக அப்போது பிரதானமாக கூறியிருந்தேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


ஈழக்கொள்கை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Reviewed by Author on April 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.