மட்டு உத்தியோகத்தருக்கு மிருதிய ரத்ன விருது
மிருதிய ரத்ன- 2016 விருது மட்டக்களப்பு மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தரான ஜே.நெல்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் உள்நாட்டு மீன்பிடி மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடத்தப்பட்ட விருது வழங்கல் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், பத்தரமுல்லையிலுள்ள அபே கம மண்டபத்தில் நடைபெற்ற இந்த மிருதிய ரத்ன- 2016 விருது வழங்கும் விழாவிற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், இன்னும் பல அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும், அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதில் கல்முனையைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஜே.நெல்சனுக்கு இந்த வருடத்துக்கான சிறந்த விரிவாக்கல் உத்தியோகத்தருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருது வழங்கல் விழாவில், சிறந்த கிராமிய மீனவர் சங்கம், சிறந்த உள்நாட்டு மீனவர் சங்கம், சிறந்த மீன்குஞ்சு உற்பத்தியாளர், சிறந்த இறால் குஞ்சு உற்பத்தி நிலையம், சிறந்த மீன்குஞ்சு பொரிப்பு நிலையம், சிறந்த நீர் உயிரியலாளர், சிறந்த வாகனச் சாரதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த வாகனச் சாரதியாக மட்டக்களப்பு அலுவலக சாரதி பி.தமிழரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டு உத்தியோகத்தருக்கு மிருதிய ரத்ன விருது
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:

No comments:
Post a Comment