அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரனின் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இரா.சம்பந்தன்!


பிரபாகரனால் துப்பாக்கியை கொண்டு செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலினால் செய்ய முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கையும் கிழக்கையும் இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவதன் மூலம் தமிழீழத்தை மேலும் தலைதூக்குவதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும், தற்போதய அரசாங்கம் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்வந்து செயற்படவில்லை.

தான் உள்ளிட்டவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதாக சிலர் ஊடகங்களில் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

எனினும், தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தவில்லை. அதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே செய்துள்ளதாக உதயகமன்பில மேலும் தெரிவித்துள்ளார்.


பிரபாகரனின் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இரா.சம்பந்தன்! Reviewed by Author on April 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.