அண்மைய செய்திகள்

recent
-

‘ஆடல் உலகில் எனது சுவடுகள்’ என்ற கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில்--அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்



கலைப்படைப்புகள் மூலம் தமிழ்த் தேசியத்தையும் இனஉணர்வையும் வளர்த்த நாட்டியப் பேராசான் கலைஞர் வேல் ஆனந்தன்
-    அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
  நாட்டியப் பேராசான் கலைஞர் வேல் ஆனந்தன் அவர்கள் தனது கலைப்படைப்புகள் மூலம் தமிழ்த் தேசியத்தையும்  இனஉணர்வையும் வளர்த்தவர். இதை அவர் பல்வேறு தளங்களில்ää பல்வேறு வடிவங்களில் மேற்கொண்டார் என மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மன்னார் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார். ‘ஆடல் உலகில் எனது சுவடுகள்’ என்ற கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  வவுனியா நகரசபை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது கலைஞர் வேல் ஆனந்தன் அவர்கள் ஆடல் உலகில் தனது சுவடுகளை மிக நேர்த்தியாக  நுணுக்கமாக உணர்வுபூர்வமாக பதிவுசெய்துள்ளார். இவை வெறுமனே அனுபவப் பதிவுகள் மட்டுமல்ல அவருடைய கலைவாழ்வின் வாக்குமூலங்கள். அவருடைய கலைவாழ்வின் சாதனைகளதும்
 வேதனைகளதும் மிகைப்படுத்தப்படாத பதிவுகள்.
  “நான் புகழ்பெற்ற எழுத்தாளனுமல்ல பேச்சாளனுமல்ல” என சுய அடக்கத்தோடு இந்நூலை ஆரம்பிக்ககும் வேல் ஆனந்தன் அவர்கள் உண்மையில் சிறந்த ஓர் எழுத்தாளராக தன்னை இனங்காட்டியுள்ளார். மிகவும் நுணுக்கமாகத் தேர்ந்தெடுத்த
 முறையான சொற்பிரயோகங்களை தகுந்த இடத்தில் கையாண்டுள்ளார். ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்போடு – அடுத்து என்ன? என்ற ஆர்வத்தோடு வாசிக்கும்படியாக இந்நூலை நகர்த்திச் செல்கிறார்.
  இந்நூல் திரு.வேல் ஆனந்தன் அவர்களுடைய வாழ்க்கைபற்றி சொன்னாலும்ää உண்மையில் இந்நூல் அவருடைய கலையுலக வாழ்வின் அனுபவப் பதிவுகளாக உள்ளது. அவருடைய சாதனைகளின் தகவல்களாக உள்ளது. நாட்டியக் கலைபற்றிய அவருடைய அரிய அறிவுட்டல்களாக உள்ளது. ஆடற்கலை பற்றிய நடைமுறைசார்ந்த மதிப்பீடாக உள்ளது.
  ஆசிரியரின் அனுபவச் சுவடுகள் ஒருவகையில் ஈழத்து ஆடற்கலை வரலாறாகவும் அமைந்துள்ளது எனலாம். ஏனெனில் தனது அனுபவங்களினூடே ஆடற்கலை சார்ந்த பல வரலாற்றுத் தகவல்களையும் அவர் நமக்குத் தருகின்றார். இந்நூலை திரு. வேல் ஆனந்தன் அவர்கள் எழுதவில்லையானால் ஈழத்துக் கலை உலகு குறிப்பாக ஈழத்து ஆடற்கலையுலகு கணிசமான பல வரலாற்றுத் தகவல்களை இழந்திருக்கும் என்பதில் தவறில்லை.
  ஈழத்தமிழருக்கான ஆடற்கலை வடிவம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது ஆதங்கத்தினை பல இடங்களில் வேல் ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். இது அவருடைய நீண்டகால உள்ளுணர்வின் வெளிப்பாடுää தனது இனத்துவ அடையாளத்தோடுகூடிய ஈழத்தமிழருக்கான ஓர் தனித்துவமான – பிரத்தியேகமான ஆடற்கலை வடிவத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆவல் அவருடைய வாழ்நாளில் நிறைவுசெய்யப்படவேண்டும்.

 
















‘ஆடல் உலகில் எனது சுவடுகள்’ என்ற கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில்--அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் Reviewed by Author on April 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.