நல்லாட்சியில் நாளும் தமிழர்கள் கைது!
தினமும் ஒருவர் இருவர் என வடகிழக்கு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதும் கடத்திச்செல்லப்பட்டு விசாரிப்பதும் நல்லாட்சியா? என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரனை மன்னாரில் அவரின் இல்லத்தில் வைத்து இராணுவபுலனாய்வாளர்கள் கைது செய்தமை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சாதாரணமாக அப்பாவி இளைஞர்கள் என தினமும் கைதுசெய்யப்படுவதும் தடுத்துவைப்பதும் என்றுமில்லாத வகையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் மக்கள் மத்தியில் அச்ச சூழல் தோன்றியுள்ளது. எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் ஐயாவும் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடமுடியாதநிலை தற்போது கிளிநொச்சி விஜயத்திற்குப்பின் ஏற்பட்டுள்ளது தமிழர் எதிர்கட்சி தலைவராக இருப்பதை பொறுத்துக்கொள்ளாத இனவாதிகள் சம்பந்தன்ஐயா மீது அவதூறான
குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை நல்லாட்சி அரசு முற்றுப் புள்ளி வைக்க தவறியுள்ளது.
மொத்தத்தில் தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்யும் தமிழ்தலைமைக்கும் பாதுகாப்பில்லை தமிழ்மக்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையே இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணமுடிகிறது.
எனவே உடனடியாக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய ஐனாதிபதி நடவடிக்கை மேற்கொள்வதோடு இனியும் தமிழ் இளைஞர்கள் கைது செய்வதும் கடத்தப்படுவதும் தொடர் கதையாவதை நிறுத்த வேண்டும் எனவும் அரியநேத்திரன் மேலும் கூறினார்.
நல்லாட்சியில் நாளும் தமிழர்கள் கைது!
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:
No comments:
Post a Comment