வி.எஸ்.சிவகரன் பிணையில் விடுதலை
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அவர் இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களின் போது இவர் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.
தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் இன்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வி.எஸ்.சிவகரன் பிணையில் விடுதலை
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:

No comments:
Post a Comment