இன்றுமுதல் ஆசன முன்பதிவுக்கு தடை.!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் இடம்பெறவுள்ளதாகவும் புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிகருதியே இந்த சேவை இடம்பெறவுள்ளதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இச் சேவையை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
50 மேலதிக ரயில் சேவைகளும் 3482 மேலதிக இ.போ.ச. பஸ் சேவைகளும் நடத்தப்பட உள்ளதோடு தனியார் பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பண்டிகைக் காலத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் அறவிடும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்றுமுதல் ஆசன முன்பதிவுக்கு தடை.!
Reviewed by Author
on
April 08, 2016
Rating:

No comments:
Post a Comment