தமிழீழ வைப்பகத்தின் தங்க நகை; மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் நில அகழ்வு நடவடிக்கையில் நேற்று மாலை 4 மணியளவில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009-ம் ஆண்டு வரை செயற்பட்டு வந்துள்ளது.
மேற்படி இடம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்னதாக, குறித்த செயலகத்திற்கு முன்னே இருந்த தனியார் ஒருவரின் வெறும் காணியில் இருந்த ஆழமான மண் கிணற்றுக்குள் மக்கள் அடைவு வைத்த தங்க நகைகளை போட்டு கிணற்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தின் ஊடக குறித்த தகவலை வழங்கியுள்ளதாகவும், இதன் மூலமே இந்த அகழ்வு நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நில அகழ்வு நடைபெறும் இடத் தில் மாவட்ட நீதிபதி சமுகமளித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபையினர் இரவு நேரப் பணிக்காக மின்னிணைப்பு செய்துள்ளனர். அகழ்வை மேற் கொள்வோர் கிணற்றின் அடையாளம் சரியாகத் தெரியாத தால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் நேற்றிரவு அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டு ஒரு ஏக்கர் காணியைச் சுற்றி பொலிஸார் இரவுக்காவலில் ஈடுபட்டுள்ளனர்.மீண்டும் அகழ்வு நடவடிக்கை இன்று காலை ஆரம்பமாகும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
April 27, 2016
Rating:

No comments:
Post a Comment