பெண்ணொருவரின் வயிற்றில் 14 கிலோ கட்டி!
பெண்ணொருவரின் வயிற்றில் காணப்பட்ட 14 கிலோ கிராம் கட்டியொன்றை, அனுராதபுரம் வைத்தியசாலையின் மருத்துவர்கள் குழுவொன்று வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
கரு சூல் ஒன்றில் ஏற்பட்ட கட்டி வயிற்றில் பெரிதாக வளரும் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒரு அடிக்கும் மேலான நீளமான இந்த கட்டி 9 அங்குலம் அகலமானதாக காணப்படுகிறது.
கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து இந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.
ஜகத் என் ஹேரத், கோஷல டெப் மற்றும் லங்கா சந்திர ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு அனுராதபுரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
பெண்ணொருவரின் வயிற்றில் 14 கிலோ கட்டி!
Reviewed by Author
on
May 13, 2016
Rating:

No comments:
Post a Comment