மத்திய கிழக்கிலிருந்து 181 பேர் நிர்க்கதி நிலையில் நாடுதிரும்பியுள்ளனர்!
மத்திய கிழக்குத் தொழிலுக்காகச் சென்று நிர்க்கதி நிலைக்குள்ளான 181 பேர் நேற்று மற்றும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
குவைட் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்களே கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
மத்திய கிழக்கில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த ஆண்கள் 67பேர் நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்தனர்.
அதேபோன்று அவ்வாறான நிலைகளை எதிர்கொண்டிருந்த 18 பெண்கள் இலங்கைக்குத் திரும்பி வந்திருந்தனர்.
இவர்களில் பலரும் உடல், உள ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து 181 பேர் நிர்க்கதி நிலையில் நாடுதிரும்பியுள்ளனர்!
Reviewed by Author
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment