மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் 2010 BATCH
"கடந்த சில தினங்களாக வெள்ளத்தால் பாதிக்கபட்ட எமது உறவுகளுக்கு உதவும் முகமாக XAVIERITIES 10 (2010 BATCH St xaviers boys national school ) ஆல் ஏற்பாடு செய்யப்பட "வெள்ள நிவாரண உதவி "க்கு அனுமதி வழங்கிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் M.L.A.REGINOLD அவர்களுக்கும்,
ஆலய பங்குகளில் பொருட்கள் சேகரிக்க அனுமதி வழங்கிய மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் VICTOR SOSAI அவர்களுக்கும் மற்றும் உதவி செய்த, அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இன்னும் யாருக்கவது நன்றி கூற மறந்து இருந்தால் அவர்களுக்கும் நன்றி .
நீங்கள் வழங்கிய அனைத்து பொருட்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உருத்திரபுரம் மேற்கு (கிராம பிரிவு -34) உட்பட 3 கிராம மக்களுக்கும் ,சிவநகர் (கிராம பிரிவு-35) கிராம மக்களுக்கும் 1500 பெறுமதியான 100 பொதிகளை 100 குடும்பங்களுக்கும் ,வன்னி விழிப்புணர்வு சங்கத்திற்கும் எமது XAVIERITIES10 மாணவர்களால் நேரடியாக 24/05/2016 அன்று வழங்கபட்டு உள்ளது.
மிகுதி ஒரு பகுதி பொருட்கள் SRILANKA TELECOM (Mannar Branch ) இற்கு வழங்கபடுள்ளது. பல கஷ்டங்களின் போதும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து பொருட்களை 2,3 நாட்களில் சேகரித்து பொதிகள் ஆக்கி அதை வாகனம் மூலம் கிளிநொச்சி எடுத்து சென்று வழங்க உதவி செய்த XAVIERITIES 10 அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகள்.
"நீ விரும்பாததை இந்த உலகமே சொன்னாலும் செய்யாதே .
நீ விரும்புவதை இந்த உலகமே எதிர்த்தாலும் செய்து முடி டா "
மன்னார் மண்ணின் பெருமையை மாணவர்கள் தமது சிந்தனையாலும் செயலாலும் வெளிக்கொணர்கிறார்கள் இதற்காக உதவிய நன்கொடை வழங்கிய மன்னார் மக்களுக்கும் பாரிய உதவியினை சேவையினை நிகழ்த்திய புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் 2010 BATCH ஒவ்வொருவருக்கும் எமது நியூமன்னார் இணையகுழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்தி நிற்கிறோம்.
நீ முதலில் புறப்படு....
உன் பின்னால் உலகமே வருமடா.....
மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் 2010 BATCH
 
        Reviewed by Author
        on 
        
May 26, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 26, 2016
 
        Rating: 














No comments:
Post a Comment