தென்மேல் பருவக்காற்று நிலைகொண்டுள்ளதால் தொடர்ந்து மழை பெய்யும் சாத்தியம்...
நாட்டில் மேலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவுக்கு மேலாக தற்போது தென் மேல் பருவக்காற்று நிலை கொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேற்கு, வடமேல், தெற்கு, மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை எதிர் பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு, ஊவா மாகாணங்களில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தென்மேல் பருவக்காற்று நிலைகொண்டுள்ளதால் தொடர்ந்து மழை பெய்யும் சாத்தியம்...
Reviewed by Author
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment