பெண்கள் பாதுகாப்பிற்காக மும்பை புறநகர் ரயில்களில் புதிய வசதி அறிமுகம்!
ரெயில்பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில் பெட்டிகளில் 'பேனிக் பட்டன்' வசதியை மத்திய ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் ரயிலில் மகளிர் பெட்டிகளில் இந்த சிவப்பு புஷ் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டிருந்த இந்த 'பேனிக் பட்டன்' வசதி தற்போது முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுவரை, ரயில் பயணத்தின்போது அவசர உதவிக்கு பெண்கள் ரயில்வே வழங்கியுள்ள உதவி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்பியோ அல்லது ரயிலின் அபாய சங்கிலியை இழுத்தோ சம்பந்தப்பட்டவ்ர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால்,தற்போது அபாயச் சங்கிலிக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள இந்த பேனிக் பட்டனை அழுத்தினால், உடனடியாக ரயில் பெட்டியின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பிளாஷ் விளக்கு ஒளியை உமிழ்ந்து அபாய சத்தத்துடன் சமிக்கை தெரிவித்துவிடும். இதன்மூலம், பிளாட்பாரத்தில் உள்ள சக ரயில் பயணிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க இயலும்.
பெண்கள் பாதுகாப்பிற்காக மும்பை புறநகர் ரயில்களில் புதிய வசதி அறிமுகம்!
Reviewed by Author
on
May 30, 2016
Rating:

No comments:
Post a Comment