முள்ளிவாய்க்காலில் பெண்களுடன் அழுது புலம்பிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் பெண்களுடன் சேர்ந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கதறியழுது தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்கள் அங்கு வருகை தந்த பெண்களை கட்டித்தழுவி கதறியழுத சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.
வன்னி யுத்தத்தில் தனது கால் ஒன்றை இழந்த அவர் யுத்த காலப் பகுதியில் அங்குள்ள மக்களுடன் வாழ்ந்ததுடன் யுத்த அவலங்களை நேரடியாக அனுபவித்தவர் என்ற வகையில் தன்னுடைய வலிகளை அங்கு வந்த பெண்களுடன் சேர்ந்து அழுது புலம்பித் தீர்த்ததை காணக்கூடியதாக இருந்தது.
முள்ளிவாய்க்காலில் பெண்களுடன் அழுது புலம்பிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!
Reviewed by Author
on
May 18, 2016
Rating:

No comments:
Post a Comment