பரீட்சையில் சாதனை! மூவரின் உயிரை காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த மாணவியின் நெகிழ்ச்சிப் பதிவுகள்...
மும்பையில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவி ஒருவர் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வில் கூட்டு சராசரி தர புள்ளி (சி.ஜி.பி.ஏ.) 8.6 பெற்று பெற்றோருக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
மும்பையில் கெஜல் பாண்டே (வயது 16) என்ற மாணவி கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
அவர்களை முந்தி செல்ல முயன்ற கார் இடித்து விபத்து ஏற்படுத்தியதில் கெஜல் பாண்டே மூளை பாதிப்பு அடைந்துள்ளார். அதன்பின் அவர் மூளை சாவு அடைந்து விட்டார் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரது உறுப்புகளை கொடையாக அளிக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் 14 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிர் பிழைத்தனர்.
அந்த மாணவி விளையாட்டு, நடனம் மற்றும் பிற துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார். பிறந்த நாள் வருவதற்கு 10 நாட்களுக்கு முன் விபத்தில் பலியாகி உள்ளார். அவர் வர்த்தக படிப்பு எடுத்து சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஆக விரும்பினார். ஆனால் அது நடைபெறவில்லை என அவரது தந்தை சோகமுடன் கூறியுள்ளார்.
பரீட்சையில் சாதனை! மூவரின் உயிரை காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த மாணவியின் நெகிழ்ச்சிப் பதிவுகள்...
Reviewed by Author
on
May 30, 2016
Rating:
Reviewed by Author
on
May 30, 2016
Rating:


No comments:
Post a Comment