விறுவிறுப்புடன் நடைபெறும் வன்னியின் பெரும் போர்....
வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி இந்த வருடம் 2016ம் ஆண்டு ஆறாவது முறையாக கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி களத்தடுப்பை தீர்மானித்தது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாட தயாராகிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 41 பந்துபரிமாற்றங்களில் 8 விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 241 ஓட்டங்களை பெற்ற வேளை தமது வெற்றி இலக்குக்கு ஓட்டங்கள் போதுமென அணித்தலைவரால் தீர்மானிக்கப்பட்டுதுடுப்பாட்டத்தை இடை நடுவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிடம் கொடுத்தது.
அப்போட்டியில் அணித்தலைவர் பேபிசன் தனது அணிக்காக 66 ஓட்டங்களையும், யதுசன் 57 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து வெற்றி இலக்கை தீர்மானித்து களமிறங்கிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி மொத்தமாக 49 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கற் இழப்பிற்கு 80 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தது.
எனினும் இருள் சூழ்ந்து கொள்ள போட்டி இடை நடுவே நடுவர்களால் நிறுத்தப்பட்டு தொடந்து நாளை காலை 9மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகும் என நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது.
விறுவிறுப்புடன் நடைபெறும் வன்னியின் பெரும் போர்
விறுவிறுப்புடன் நடைபெறும் வன்னியின் பெரும் போர்....
Reviewed by Author
on
May 28, 2016
Rating:
Reviewed by Author
on
May 28, 2016
Rating:


No comments:
Post a Comment