அண்மைய செய்திகள்

recent
-

சம்பூர் மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி - இயற்கை எரிவாயு மின்நிலையத்திற்கு இந்தியா இணக்கம்....


சம்பூர் அனல் மின் நிலையத்தை திரவ இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யும் நிலையமாக மாற்றுவதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதனை இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் எசல வீரக்கோன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது மோடி, மைத்திரிபாலவின் யோசனையை ஏற்றுக்கொண்டதாக வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்

நிலக்கரியை கொண்டு மின்னுற்பத்தியை மேற்கொள்வதால், சம்பூரில் சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டதுடன் மக்கள் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனிடம் தமது எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

இதன்போது இதனை இராஜதந்திர ரீதியில் அணுகவுள்ளதாக சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதியன்று இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை இந்திய அதிகாரிகளினால் இந்தியாவில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சம்பூர் மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி - இயற்கை எரிவாயு மின்நிலையத்திற்கு இந்தியா இணக்கம்.... Reviewed by Author on May 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.