வித்தியா படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி....
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகின்றது.
இதனை முன்னிட்டு வவுனியாவில் இன்று நினைவு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டது.
இதேவேளை ஆதிவிநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இதில் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வித்தியா படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி....
Reviewed by Author
on
May 13, 2016
Rating:

No comments:
Post a Comment