கிளிநொச்சியில் கத்தியுடன் உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் கைவரிசை...
கரடிப்போக்கு சந்தியில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் உள்ளே பெரிய பரந்தன் பகுதியில் தனியாக உள்ள வீடொன்றினுள் அதிகாலை ஐந்து மணியளவில் கத்தி மற்றும் விளையாட்டு துப்பாக்கியுடன் உள்நுழைந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்று கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி வீட்டில் இருந்த தாய் , மகள் மற்றும் தாத்தா ஆகியோரை பயமுறுத்தி நாற்பத்தி எட்டாயிரம் ரூபா பணத்தையும் ஒருபவுன் கைச் சங்கிலி மற்றும் ஒரு கைத்தொலை பேசியையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, இன்று அதிகாலையில் தங்களை புலனாய்வாளர்களாக சித்தரித்துக்கொண்டு குறித்த வீட்டில் கைத்துப்பாக்கி உள்ளதாக தகவல் கிடைத்து தாம் வருகை தந்ததாக
கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளைக்கும்பல் ஒருவரை வீட்டு நுழைவாயிலில் காவலில் விட்டுவிட்டு வீட்டை சல்லடை போட்டு மூவர் தேடியுள்ளனர் பின்பு வீட்டில் எதுவும் இல்லை எனவும் தாம் கொள்ளைக்ககாவே வந்ததாகவே தெரிவித்து கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி பணம் ,கைத்தொலைபேசி மற்றும்
மகளின் கையிலிருந்த கைச்சங்கிலி என்பவற்றையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சிவில் உடையில் இருந்ததாகவும் ஜாக்கட் அணிந்திருந்ததாகவும் வீட்டார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டாரால் இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சியில் கத்தியுடன் உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் கைவரிசை...
Reviewed by Author
on
May 06, 2016
Rating:
Reviewed by Author
on
May 06, 2016
Rating:


No comments:
Post a Comment