முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி! அனுமதியளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயகலா கடிதம்....
இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றினை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவிடம்சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கடிதமொன்றினை அவர் அமைச்சர் ருவான் விஜயவர்தனவுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு உயிரிழந்தனர்.
3 தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்திலும் பெருமளவான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களை நினைவு கூர்ந்து இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுத் தூபியொன்றினை அமைக்க வேண்டியுள்ளது.
இதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்க வேண்டும்.
அத்துடன் நினைவுத் தூபியை அமைப்பதற்கான நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை பகிரங்கமாக நினைவுகூர முடியாத நிலை காணப்பட்டு வந்தது.
ஆனால் புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே இந்த நிலை உருவாகியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுத் தூபி அமைக்கப்படுமானால் வருடந்தோறும் உறவுகளை இழந்த மக்கள் அங்கு ஒன்றுகூடி தமது அஞ்சலியை செலுத்தக் கூடியதாக இருக்கும்.
எனவே இங்கு நினைவுத் தூபி அமைப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டியது அவசியமாகும்.
இதற்கு அனுமதி வழங்குமாறு நான் கோரி நிற்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி! அனுமதியளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயகலா கடிதம்....
Reviewed by Author
on
May 18, 2016
Rating:

No comments:
Post a Comment