கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை?: இந்திய அரசு அதிருப்தி!
கச்சதீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முன்திட்டமாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது.
கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்களின் வலைகளை உலர்த்த, அங்கு நடக்கும் அந்தோனியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
காலப்போக்கில் தமிழக மீனவர்களை கச்சதீவு பக்கம் வரவிடாமல் தடுத்து வருகிறது இலங்கை கடற்படை.
இந்நிலையில் கச்சதீவில் ரூ.1 கோடி செலவில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட திங்கட்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளது இலங்கை.
இலங்கை வடக்கு மாகாண கடற்படை தளபதி பியல் டி சில்வா தேவாலயத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த விழாவில் கடற்படை அதிகாரிகள், பிஷப்புகள் கலந்து கொண்டனர்.
கச்சதீவை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கடற்படை முகாம் அமைக்கவே முதல்கட்டமாக தேவாலயத்தை இலங்கை கட்டுவதாக கூறப்படுகிறது.
இந்திய மத்திய அரசுக்கு தெரியாமல் தேவாலயம் கட்டுவது குறித்து தேசிய மீனவர் பேரவை அமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பில் உள்ள இந்திய தூதருக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை?: இந்திய அரசு அதிருப்தி!
Reviewed by Author
on
May 13, 2016
Rating:

No comments:
Post a Comment