பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை!
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்றுவிடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலை செய்திருந்தனர்.
மேலும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்களுக்காகவும் தண்டப்பணம் செலுத்தாததன் காரணமாகவும் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த எட்டு பேரையே நேற்றைய தினம் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்ததாக யாழ் சிறைச்சாலையின் பிரதம அதிகாரி தெரிவித்தார்.
பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை!
Reviewed by Author
on
May 21, 2016
Rating:

No comments:
Post a Comment