தண்ணீர் திருடிய குற்றத்திற்காக விவசாயி கைது!
இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில், மத்திய இந்திய பகுதியில் தண்ணீரை திருடி குழியில் சேமித்து வந்த விவசாயி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசத்திற்கும், உத்தரப் பிரதேசத்திற்கும் இடையில் அமைந்திருக்கும் மலைப்பகுதியான மஹோபாவ மாவட்டத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
மஹோபாவ மாவட்டம் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியின் பிடியில் இருக்கிறது.
குறித்த மாவட்டத்தின் பண்டல்கண்ட் பகுதியில் உள்ள ஹீரா லால் என்னும் விவசாயி, நீர் வழங்கும் பைப்பை உடைத்து அதிலிருந்து நீரை திருடி ஒரு குழிக்குள் சேமித்து வந்துள்ளார்.
இதை அறிந்த அப்பகுதியின் நீர் நிறுவனத்தின் செயற் பொறியாளர் ராஜீவ் பட்நாகர், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகரை அடுத்து பொலிசார், ஹீரே லாலை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஹீரே லாலின் குடும்பத்தினர் கூறுகையில், பல நாட்களாக தண்ணீர் செல்லும் பைப் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், ஹீரே லால் மீது பொய் புகார் சுமத்தப்பட்டுள்ளதாக அவரின் மகன் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் திருடிய குற்றத்திற்காக விவசாயி கைது!
Reviewed by Author
on
May 06, 2016
Rating:
Reviewed by Author
on
May 06, 2016
Rating:


No comments:
Post a Comment