மன்னாரில் மே-18 நினைவழியா முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலுக்கு அழைப்பு.
முள்ளிவாய்க்காலில் வகை தொகையின்றி இன அழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி தமிழ் மக்கள் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழ் மக்களின் தார்மீக கடமையும் உரிமையும் ஆகும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
-இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
எமது மக்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை அரசாங்கமும் சிங்கள கடும் போக்குவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த வருடம் போல் நீதிமன்றங்கள் இந் நிகழ்விற்கு தடை விதிப்பது எமது உணர்வுகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் செயலாகும்.
எனவே மே 18 ஆத்மசாந்தி பிராத்தனையை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் மன்னாரில் நடாத்தவுள்ளது.
-எதிர்வரும் 18 ஆம் திகதி புதன் கிழமை மன்னார் நகர மண்டபத்தில் காலை 10.00மணிக்கு குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில்'2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சாவால்கள்'என்னும் தலைப்பில் சிறப்புரை இடம் பெறவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.
இவ்வுணர்வுபூர்வமான நிகழ்வில் தார்மீக அடிப்படையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
- மன்னார் நிருபர்-
(11-05-2016)
-இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
எமது மக்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை அரசாங்கமும் சிங்கள கடும் போக்குவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த வருடம் போல் நீதிமன்றங்கள் இந் நிகழ்விற்கு தடை விதிப்பது எமது உணர்வுகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் செயலாகும்.
எனவே மே 18 ஆத்மசாந்தி பிராத்தனையை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் மன்னாரில் நடாத்தவுள்ளது.
-எதிர்வரும் 18 ஆம் திகதி புதன் கிழமை மன்னார் நகர மண்டபத்தில் காலை 10.00மணிக்கு குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில்'2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சாவால்கள்'என்னும் தலைப்பில் சிறப்புரை இடம் பெறவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.
இவ்வுணர்வுபூர்வமான நிகழ்வில் தார்மீக அடிப்படையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.- மன்னார் நிருபர்-
(11-05-2016)
மன்னாரில் மே-18 நினைவழியா முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலுக்கு அழைப்பு.
Reviewed by NEWMANNAR
on
May 12, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 12, 2016
Rating:

No comments:
Post a Comment