அண்மைய செய்திகள்

recent
-

ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!- சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் தகவல்!


ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன.

அதில் பிந்திய தகவலின்படி, ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என விசாரணை அதிகாரியாக இருந்தவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்

அப்படியானால், 25 ஆண்டுகளாக சின்ன சாந்தன் என்பவர் எதற்காக சிறையில் இருக்கிறார்? என கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு, மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை வழக்கில் போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

இந்தப் படுகொலை வழக்கில், சி.பி.ஐ. அடையாளம் காட்டும் நபர்களைப் பிடித்து வரும் ட்ராக்கிங் குழுவில் இருந்த சி.பி.ஐ. ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ், ' குண்டு சாந்தனை நான்தான் சுட்டேன்' என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய பதிவில், விடுதலைப்புலி குண்டு சாந்தனை திருச்சியில் வைத்து விடியக் காலை 04.10 மணிக்கு மூன்று ஆய்வாளர்கள், 7 ரவுண்ட் சுட்டோம். நான் பயன்படுத்தியது .38 ரிவால்வர். மற்றவர்கள் பயன்படுத்தியது 9 எம்.எம். பிஸ்டல். நான் சுட்டது ஒரு ரவுண்ட் மட்டுமே.

குண்டு சாந்தன் இருதயத்தைத் துளைத்துச் சென்றது என் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டுதான். இது தெரிந்தவுடன் என் நண்பர்கள் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்தக் காட்சிகள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. இது கதை வசனம் இல்லை.

ஒரு தேசபக்தன், தன்னுடைய தேசத்தின் மானம் காக்க துணிச்சலாகக் கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு" என பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஜெபமணி மோகன்ராஜ்.


ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!- சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் தகவல்! Reviewed by Author on June 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.