ஜோசப்வாஸ் நகரில் இருந்து மன்னாருக்கான பாடசாலை சேவை பாதீப்பு-மாணவர்கள் அசௌகரியம்(படம்)
ஜோசப்வாஸ் நகரில் இருந்து மன்னாரிற்கு பாடசாலை மாணவர்களை ஏற்றும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பேரூந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜோசப்வாஸ் நகர் வீதியில் புதையுண்டமையினால் பாடசாலை சேவை தடைப்பட்டுள்ளது.இதனால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பிரிதொரு பேரூந்தில் ஏறி மன்னாரிற்குச் சென்றுள்ளது.
மன்னாரில் குறித்த பேரூந்து ஜோசப்வாஸ் நகரிற்கு சென்று பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் மன்னாரிற்கு வருவது வழமை.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காக ஜோசப்வாஸ் நகரிற்கு சென்ற குறித்த பேரூந்து குறித்த கிராமத்தின் பிரதான வீதியில் புதையுண்டுள்ளது.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்கள் பாடசாலைக்கு நேரத்துடன் செல்லும் நோக்கில் பிரதான வீதி வரை நடந்து சென்று அவ்வீதியால் வந்து பிரிதொரு பேரூந்தில் ஏறி மன்னாரிற்குச் சென்று பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.குறித்த வீதி நீண்டகாலமாக சீர் செய்யப்படாத நிலையில் குண்றும் குழியுமாக காணப்படுகின்றது.
-இதனால் போக்குவரத்துக்களை மேற்கொள்ளுவதில் குறித்த கிராம மக்கள் பல்வேறு சௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

Reviewed by Author
on
June 01, 2016
Rating:
Reviewed by Author
on
June 01, 2016
Rating:

No comments:
Post a Comment