புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலைக்கு மூன்றுமாடி நான்கு கோடி அடிக்கல் நாட்டுவிழா-படங்கள் இணைப்பு
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலைக்கு கல்வி அமைச்சால் 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள வகுப்பறை மற்றும் கேட்ப்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 17-06-2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் மற்றும் கல்வி அமைச்சின் தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிப்பாளர் எம்.முரளீதரன், மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.செபஸ்டியன், மன்னார் கோட்டக் கல்வி அதிகாரி மரியான் கூஞ்ஞ ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலைக்கு மூன்றுமாடி நான்கு கோடி அடிக்கல் நாட்டுவிழா-படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 17, 2016
Rating:

No comments:
Post a Comment