அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் ஜனாதிபதி உருவாக்கிய உல்லாச மாளிகையை வடமாகாண சபைக்கு தருமாறு கோரிக்கை...


யாழ்.காங்கேசன்துறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ உருவாக்கிய உல்லாச மாளிகையை வடமாகாண சபைக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாளிகையை மாகாணசபைக்கு பெற்றுக் கொடுப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்பதுடன் அதன் ஊடாக மாகாணசபை பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் அவைத்தலைவர் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையினை முன்வைத்து சீ.வி.கே.சிவஞானம் பேசுகையில், இந்த கட்டிடம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கபடுவது பொருத்தமாக இருக்கும் இதனூடாக பல செயற்திட்டங்களை நாம் இங்கு முன்னெடுக்க முடியும் எனவே அதனை வடக்கு மாகாண சபைக்கு பெற்று தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதற்கு பதிளலித்த இணைத்தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை யாழ் பல்கலைக்கழகத்தினரும் தமக்கு தருமாறு கேட்டுள்ளனர். இந்த நிலையில் வடக்கு மாகாண சபை தனது கோரிக்கையினையும், இதற்கான காரணங்களையும் எழுத்து வடிவில் தருமாறும் அதனை கொண்டு கலந்துரையாடி அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி உருவாக்கிய உல்லாச மாளிகையை வடமாகாண சபைக்கு தருமாறு கோரிக்கை... Reviewed by Author on June 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.