பெரிய கரிசல் கிராமத்தில் ஒல்லாந்தர் கால பழமை வாய்ந்த ஆலயத்தினுள் புதையல் தோண்டும் நடவடிக்கை-பொலிஸார் விசாரனை
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த கப்பலேந்தி மாதா ஆலய கட்டிடத்தினுள் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(7) மாலை சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஒல்லாந்தர் காலத்தில் 1850 ஆம் ஆண்டளவில் குறித்த கப்பலேந்தி மாதா ஆலயம் அப்பகுதியில் அமைக்கப்பட்டதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
-இந்த நிலையில் அப்போதைய காலத்தில் குறித்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபங்களில் காணப்பட்ட தங்கத்திலான பொருட்கள் பல குறித்த ஆலயத்தினுள் புதைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-இந்த நிலையில் குறித்த ஆலைய கட்டடம் சூழ்ந்த பகுதியை தொல் பொருள் திணைக்களம் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததோடு குறித்த பகுதியினுள் நுழைந்து அகழ்வு பணிகளை மேற்கொள்ளுவதையும் தடை விதித்திருந்தனர்.
-இந்த நிலையில் குறித்த பகுதிக்குள் கடந்த சில தினங்களாக சென்ற நபர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் அக்கிராம மக்கள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
-நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸார் மற்றும் தொல் பொருள் திணைக்கள பொலிஸ் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
-இதன் போது சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த ஆலய கட்டிடத்தின் உள் பகுதியில் சுமார் 8 அடி வரையில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அருகில் தேசிக்காய் உள்ளிட்ட சில பொருட்களும் காணப்பட்டுள்ளது.
-குறித்த பகுதியில் மீட்கப்பட்ட தடையப்பொருட்களை மீட்டுள்ள மன்னார் பொலிஸார் விசானைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த மன்னார் பொலிஸார் தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் மேற்குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் குறித்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பெரிய கரிசல் கிராமத்தில் ஒல்லாந்தர் கால பழமை வாய்ந்த ஆலயத்தினுள் புதையல் தோண்டும் நடவடிக்கை-பொலிஸார் விசாரனை
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment