ஓசை இன்பத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட செந்தூரனின் கவிதைகள்....
ஓசை இன்பத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட
செந்தூரனின் கவிதைகள்......
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நேசன் அடிகளார் உரை
எழுத்து என்பது மனித உணர்வுகளின் வடிகால் ஆகும். செந்தூரனும் தனது உணர்வுகளை கவிதை வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளார். செந்தூரனின் கவிதைகள் ஓசை இன்பத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளாக உள்ளன என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் திருச்செந்தூரன் (மன்னார் செந்தூரன்) அவர்களின் ‘யாதுமாகி’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த யூன் மாதம் 7ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனரும்ää மன்னார் கலையருவி அமைப்பின் இயக்குனரும்ää ‘மன்னா’ என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் அங்கு சிறப்புரையாற்றும்போது தொடர்ந்து கூறியதாவதுää
இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கொண்டதாகத் தமிழ்க் கவிதை திகழ்கின்றது. ஆயினும் புதுக்கவிதை என்னும் இலக்கியம் மேலைநாட்டுத் தாக்கத்தின் காரணமாக இருபதாம் நூற்றாண்டிலேயே தமிழில் அறிமுகமாகியது. அது இன்று தமிழ் வேர்விட்டுச் செழித்து வளர்ந்துவருகின்றது.
ஒரு கவிஞன் சமுதாயத்தைப் பார்க்கின்றான். அந்தச் சமுதாயத்தின் அவலங்கள் அவன் மனதை நெருடுகின்றது. உடனே அவனுக்குள் கவிதை பிரவாகித்து எழுகின்றது.
புதுக்கவிதை என்பது எதுகை மோனைகளுக்கோ யாப்பு வரையறைகளுக்கோ கட்டுப்பட்டதல்ல. மாறாக கண்களால் காண்பதைää உள்ளத்தை உறுத்துகின்ற நிகழ்ச்சிகளை உணர்வுகளோடு வெளிக்கொண்டுவருவதாகும். அநீதிக்கு எதிரான ஆவேசக் குரலாகவும்ää சமூகச் சீர்கேடுகளுக்கான சாட்டையடிகளாகவும் புதுக்கவிதைகள் இன்றும் பிரசவிக்கப்படுகின்றன. இன்று இலக்கிய உலகை புதுக்கவிதைகளே ஆட்சிசெய்கின்றன.
25 கவிதைகளைக் கொண்ட செந்தூரனுடைய கவிதை நூலின் பாடுபொருள் பரந்துபட்டதாகää பல்துறை சார்ந்ததாக உள்ளது. சந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எதுகைää மோனை போன்ற தொடைகளை அதிகம் முன்னிலைப்படுத்தி இவர் எழுதியுள்ளார். சந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அதனால் அவர் சொல்லவரும் கருத்துக்கள்ää செய்திகள் அடிபட்டுப்போகவில்லை.
இவருடைய கவிதைகளின் வெளிப்பாடுää எடுத்துரைப்பு முறை இவருக்கே உரித்தான தனித்துவத் தன்மைகொண்டதாக விளங்குகிறது. தனக்கே உரிய தனித்துவமான எழுநடையை (ளுவலடந) இவர் உருவாக்கிக்கொண்டுள்ளார்.
மடைதிறைந்து ஓடும் ஓசை இன்பத்தை அள்ளிப் பருக ஆர்வம் உடையோர் இக்கவிதா நதியினுள் களிப்புடன் கால்நனைக்கலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்விற்குத் தலைமைதாங்கினார். நூல் அறிமுகவுரையை தமிழ் எவ். எம். வானொலி அறிவிப்பாளர் திரு. எஸ். முகுந்தன் வழங்கினார். நூல் ஆய்வுரையை தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. எம். எம். ஜெயசீலன் வழங்கினார். விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஓசை இன்பத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட செந்தூரனின் கவிதைகள்....
Reviewed by Author
on
June 15, 2016
Rating:
No comments:
Post a Comment