மக்களிடம் வரும் 'வலய செயலணியிடம்' ஆரோக்கியமான கருத்துக்களை கூறுங்கள்-அருட்தந்தை இ.செபமாலை அடிகளார்.-Photos
நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ஒன்றை மன்னார் மாவட்டத்தில் நியமித்துள்ள நிலையில் குறித்த செயலணியினால் பெற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கள் அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் போது குறித்த கருத்துக்களை அரசு முன்னுரிமைப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தெரிவித்தார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,
ஜெனிவாவில் உள்ள மனித பேரவை அவையிலே அரசாங்கம் சில உறுதி மொழிகளை வழங்கியுள்ளது.
அந்த உறுதி மொழிகளுக்குள் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனை செய்யும் அலுவலகம்,உண்மை,நீதி,நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு, விசேட வழக்கு தொடுப்போருக்கான நீதிப்பொறிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நியமிப்பதாக அரசாங்கம் ஜெனிவாவில் உள்ள மனித பேரவை அவையிலே உறுதி மொழி வழங்கியுள்ளது.
ஆகவே அந்த அலுவலகங்களை நியமிப்பதற்கு அரசாங்கமானது கடந்த தை மாதம் 26 ஆம் திகதி நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ஒன்றை நியமித்தது.
அந்த செயலனியின் செயற்பாடு என்னவென்றால் குறித்த அலுவலகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்று மக்களினுடைய கருத்துக்களை கேட்டு அதனை அரசாங்கத்திற்கு வழங்குவதாகும்.
ஆகவே பிரதமரால் நியமிக்கப்பட்ட 11 அங்கத்துவர்களைக்கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியானது கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் 'வலய செயலணி' ஒன்றை உறுவாக்கியது.
குறித்த 'வலய செயலணியின்' செயற்பாடு என்னவென்றால் மாவட்டத்தில் உள்ள மக்களிடம் சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடையங்களை ஆவணப்படுத்துவதும்,அதனை அரசிற்கு வழங்குவதம் இந்த வலய செயலணியின் செயற்பாடாகும்.
நாங்கள் தற்போது ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கின்றோம்.கடந்த கால கட்டத்தில் அதாவது 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு அரசாங்கம் எல்.எல்.ஆர்.சி.என்ற ஒரு ஆணைக்குழுவை நிறுவியது.
அதன் பிற்பாடு பரனகம ஆணைக்குழுவை நிறுவியது.ஆகவே இந்த ஆணைக்குழுக்கள் எல்லாம் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது.
மக்களின் கருத்துக்களை கேட்கவில்லை. தானாக விரும்பி தாங்களினால் விசாரனை குழுவை நியமித்தது.தாங்களாக அலுவலகங்களையும் நியமித்தனர்.
வடக்கு,கிழக்கிலே உள்ள மனித உரிமைகள் ஆர்வலர்கள் இது எங்களினுடைய அலுவலகம் இல்லை.
இவை மக்களினுடைய கருத்திற்கு புறம்பான அலுவலகமாக இருந்தது என பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தது.ஆகவே மீண்டும்,மீண்டும் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை செய்யக்கூடாது.
பாதீக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டு அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என்றும்,அந்த அலுவலகங்களிலே பாதீக்கப்ட்ட மக்கள் பிரதி நிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று பல்வேறு வழியுறுத்தல்களை மேற்கொண்டதன் அடிப்படையிலும்,உலக நாடுகளின் அலுத்தத்தின் அடிப்படையிலும் குறித்த வலய செயலனியானது உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலணி மக்களிடம் சென்று கருத்துக்களை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த நிலையில் மக்கள் சரியான கருத்துக்களை கூற வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
உருவாக்கப்படுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனை செய்யும் அலுவலகம்,உண்மை,நீதி,நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு,விசேட வழக்கு தொடுப்போருக்கான நீதிப்பொரிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்ற நான்கு அலுவலகங்களும் மற்றும் வேறு எதுவும் இருப்பின் மக்கள் தமது கருத்துப்பகிர்வில் போது கூற முடியும்.
குறித்த அலுவலகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்,அங்கு எவ்வாறான பங்களிப்புக்கள் இருக்க வேண்டும்,குறித்த அலுவலகம் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும்,அங்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்துக்களை மக்கள் மிக உறுதியுடன் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அந்த கருத்துக்கள் எவ்வித ஒழிவு மறைவும் இன்றி அவை எங்களுடைய மாவட்டத்திலே ஆவணப்படுத்தப்பட்டு அரசாங்கத்திற்கும் வழங்கி வைக்கப்படும்.
ஆகவே அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் கருத்துக்களை அரசு முன்னுரிமைப்படுத்த வேண்டும் என அரசிற்கு தெரியப்படுத்துகின்றோம்.
மக்களின் ஒத்துழைப்புக்களும்,ஆதரவும் தேவைப்படுகின்றது. செயலணி உங்களை நோக்கி வருகின்ற போது உங்களின் ஆதரவையும்,முக்கியமான கருத்துக்களையும் மிக உறுதியுடன் பதிவு செய்யுங்கள்.
அமைக்கப்படவுள்ள அலுவலகங்கள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என தெழிவாக எங்களிடம் கூறும் போது அவை பலனுடையதாக காணப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களிடம் வரும் 'வலய செயலணியிடம்' ஆரோக்கியமான கருத்துக்களை கூறுங்கள்-அருட்தந்தை இ.செபமாலை அடிகளார்.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 16, 2016
Rating:
No comments:
Post a Comment