நன்கொடையாக மக்கள் வழங்கும் இரத்தம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை!
கிழக்குமாகாண மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கும் பிரதான நிலையமாக காணப்படும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அண்மைகாலமாக பல அசாதாரணங்களை கண்டுவருகிறது.
சில சந்தர்ப்பங்களில் தனியார் வைத்திய சாலைகளின் வியாபார மத்திய நிலையமாகவும், கொலைக்களமாகவும் இவ்வைத்தியசாலை பரிணாமம் பெறுகிறது.
அண்மைய சிலநாட்களாக இரத்த வங்கியில் போதுமான இரத்தம் கையிருப்பில் இல்லை. இதனால் சிறுநீரக நோயாளிகள், புற்றுநோய் பாதிப்பக்குள்ளானவர்கள், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் "எனபலர் பாதிக்கப்படுகின்றனர்.
இருந்த போதிலும் தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் குருதியின் அளவில் குறைப்பட்டதாக அறியமுடியவில்லை.
குருதி கொடையாளர்கள் பலர் உயரிய 'நோக்கமொன்றிற்காக தமது உடலில் ஓடும் விலைமதிப்பற்ற குருதியை தானமாக வழங்கும் போது சில வைத்திய நிபுணர்கள் அதனை தமது மருத்துவ வியாபாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சுகாதார அமைச்சு எந்த ஒரு ஆபத்தான நோயாளிக்கும் இலவசமாக குருதியை வழங்க வேண்டும் என்றும், தனியார் வைத்தியசாலைகளுக்கும் பொருந்தும் வகையிலும் சுற்றுநிரூபம் வெளியிட்ட போதிலும் தனியார் வைத்தியசாலைகள் இரத்தம் சேகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பையிற்குமட்டும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளது.
இதனை மட்டக்களப்பின் மருத்துவ வியாபாரிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமது வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதற்காக விலைமதிப்பற்ற குருதியை வீண்விரயம் செய்கின்றனர்.
மாதம் ஒன்றுக்கு 40 தொடக்கம் 50 பை குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. மட்டக்களப்பின் தனியார் வைத்தியசாலைகளில் எந்த ஒரு ஆபத்தான நோயாளியும் அனுமதிக்கப்படுவதில்லை.
குருதி தேவையுடைய சிறுநீரக நோயாளிகள், தலசீமியா நோயாளிகள் புற்றுநோய் பாதிப்படையோர், தீவிர இரத்தப் போக்குடையோர் என எவரும் அனுமதிக்கப்படுவதில்லை.
மாறாக வயது முதிர்வினால் குருதிகல உற்பத்தியில் மாறுபாடு கொண்ட பணம் படைத்தவர்களை திருப்திப்படுத்தவே தியாகிகளின் குருதி தனியார் வைத்தியசாலைகளில் வீண்விரயம் செய்யப்படுகிறது.
இதே போன்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் சிலநோயாளிகளும் அங்கே கடமையாற்றும் சிலதனியார் வைத்தியசாலையின் முகவர்களால் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இவற்றைவிட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவுகளிலும் பல அசாதாரணங்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக நஞ்சருந்தி அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலைமை மிகமோசமானது.
அங்கே நோயாளிகளை திட்டுவதும் மிக மோசமாக நடாத்துவதும் சாதாரணமாகி விட்டது. நஞ்சருந்திய நோயாளி அசாதாரணங்களை கடந்து உயிர் பிளைத்தால் உடனடியாக நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
இந்த நன்கொடைப்பணமே அத்தீவிர சிகிச்சைப்பிரிவின் அறிவித்தல் பலகைகளாகவும், அலங்காரப்பொருட்களாகவும் காட்சியளிக்கின்றன.
இவற்றை கண்டும், காணாமல் வைத்திய சாலையின் நிரிவாகமும் தமது கதிரையை பாதுகாப்பதில் மட்டுமே குறியாய் நிற்கின்றது.
அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள் கூட மக்கள் நேயத்தோடு செயற்படவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மக்களை பணயம் வைத்து நிர்வாகத்தை அச்சுறுத்தி இலாபமடைகின்றனர்.
ஆகவே வைத்தியசாலை பாதுகாக்கப்பட வேண்டும், பாமரமக்கள் பயன்பெற வேண்டுமெனில் மக்களும் புத்திஜீவிகளும் ஒன்றிணைய வேண்டும். மருத்துவ வியாபாரம் தடுக்கப்பட வேண்டும்.
நன்கொடையாக மக்கள் வழங்கும் இரத்தம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை!
Reviewed by Author
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment