அண்மைய செய்திகள்

recent
-

கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு விருது....


கூகுள் தலைமை செயல் அதிகாரி உட்பட நால்வருக்கு Great Immigrants: The Pride of America என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறி பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் Great Immigrants: The Pride of America என்ற விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதை வாஷிங்டனில் உள்ள கார்னிஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வழங்கும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலான PBS NewsHour தொகுப்பாளரும், மூத்த நிருபருமான ஹரி ஸ்ரீனிவாசன், McKinsey & Company-ன் தலைவரான விக்ரம் மல்ஹோத்ரா, அமெரிக்க விமர்சகர்கள் வட்ட உறுப்பினரும், விருதுபெற்ற பிரபல நூலாசிரியருமான பாரதி முகர்ஜி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இவர்களை தவிர மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 42 பேர் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விழா நியூயார்க் நகரில் நாளை(ஜூன் 30-ம் திகதி) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு விருது.... Reviewed by Author on June 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.