தமிழ், சிங்கள மொழிகளில் வணக்கம் மற்றும் நன்றி தெரிவித்த இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தமிழ், சிங்கள மொழிகளில் வணக்கம் மற்றும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று திறந்து வைத்தனர்.
இதன் போது செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்திய பிரதமர் உரையாற்றியிருந்தார். தனது உரையின் ஆரம்பத்தில் வணக்கம், சுப சந்தியாவக், ஆயுபோவான் என வணக்கம் தெரிவித்த நரேந்திர மோடி உரையின் இறுதியில் நன்றி, போமஸ்துதி போன்ற தமிழ் மற்றும் சிங்கள் மொழிகளில் பேசியிருந்தார்.
இந்திய பிரதமர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வணக்கம், நன்றி ஆகியவற்றை தெரிவித்திருந்தததையடுத்து அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
தமிழ், சிங்கள மொழிகளில் வணக்கம் மற்றும் நன்றி தெரிவித்த இந்திய பிரதமர்!
Reviewed by Author
on
June 19, 2016
Rating:

No comments:
Post a Comment