மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்-மன்னாரின் சமர்
மன்னார் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழகமும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கும் இணைந்து நடாத்தும் 'மன்னாரின் சமர்' மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
26 கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியானது கடந்த 4 மாதங்களாக மின்னொளியில் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழக மைதானத்தில் வரலாற்றில் முதல் தடவையாக மின்னொளியில் நடைபெற்று வந்தது.
முதல் சுற்று விலகல் முறையில் நடைபெற்று பின்னர் சுப்பர் 8 க்குரிய சிறந்த அணிகள் 8 தெரிவுசெய்யப்பட்டு 8 அணிகளும் ஒரே குழுவாக லீக் முறையில் ஆடியது. லீக் முறையில் ஒரு அணிக்கு 7 போட்டிகள் வீதம் கிடைத்தது. 2ம் சுற்றுக்குரிய சுப்பர் 8 போட்டிகள் யாவும் நிறைவடைந்து அரை இறுதிப்போட்டிக்குரிய 4 அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
சுப்பர் 8 அணிகள்
01. யுனைற்றட் வி க ஜோசவ்வாஸ்நகர்
02. கில்லறி வி க சாவற்கட்டு
03. சென் ஜோசப் வி க பனங்கட்டுக்கொட்டு
04. சென் லூசியா வி க பள்ளிமுனை
05. சென் அன்ரனிஸ் வி க அந்தோனியார்புரம்
06. சென் சேவியர்ஸ் வி க தேவன்பிட்டி
07. யுனைற்றட் வி க அடம்பன்
08. யுனைற்றட் வி க விடத்தல்தீவு
அரை இறுதிக்கு தெரிவாகிய 4 அணிகள்
01.யுனைற்றட் வி க ஜோசவ்வாஸ்நகர்
02.கில்லறி வி க சாவற்கட்டு
03.யுனைற்றட் வி க விடத்தல்தீவு
04.சென் ஜோசப் வி க பனங்கட்டுக்கொட்டு
இவ் அரை இறுதிப்போட்டிகள் Play Off முறையில் நடைபெறவுள்ளது. இதில் 1வது அரை இறுதியில் புள்ளி அடிப்படையில் 1ம்இடத்தைப்பெற்ற யுனைற்றட் வி க ஜோசவ்வாஸ்நகர் அணியும் 2ம் இடத்தைப் பெற்ற கில்லறி வி க சாவற்கட்டு அணியும் மோதி வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குரிய வாய்ப்பைப்பெறும்.
அடுத்த ;போட்டியில் புள்ளி அடிப்படையில் 3ம் இடத்தைப்பெற்ற யுனைற்றட் வி க விடத்தல்தீவு அணியும் 4ம் இடத்தைப்பெற்ற சென் ஜோசப் வி க பனங்கட்டுக்கொட்டு அணியும் மோதி வெற்றியடையும் அணியானது 1வது அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் 2வது அரை இறுதிப் போட்டியில் மோதும்.
1வது அரையிறுதி – 20.06.2016 இரவு 7.00 மணி
யுனைற்றட் வி க ஜோசவ்வாஸ்நகர் எதிர் கில்லறி வி க சாவற்கட்டு
2வது அரையிறுதி தெரிவுப்போட்டி – 20.06.2016 இரவு 8.30 மணி
யுனைற்றட் வி க விடத்தல்தீவு எதிர் சென் ஜோசப் வி க பனங்கட்டுக்கொட்டு
2வது அரை இறுதிப்போட்டி – 22.06.2016 இரவு 7.30 மணி
1வது அரையிறுதி தோல்வி எதிர் 2வது அரையிறுதி தெரிவு வெற்றி
இறுதிப்போட்டி - 03.07.2016 இரவு 7.00 மணி
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்-மன்னாரின் சமர்
Reviewed by NEWMANNAR
on
June 19, 2016
Rating:

No comments:
Post a Comment