அண்மைய செய்திகள்

recent
-

வெற்றிச்செல்வியின் -தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி- நூல் வெளியீடு!

முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது.

போரில் விழுப்புண் அடைந்து ஒரு கண்ணையும், ஒரு கரத்தையும் இழந்த பெண் போராளியான வெற்றிச்செல்வியின் பட்டறிவுப் பகிர்வாக மலரும் இந்த நூலின் வெளியீட்டு விழாவில் வடக்கு மாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார்.

ஆசிரியை தனலெட்சுமி கிறிஸ்துராஜன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் போராளி மருத்துவர் திருமதி தனேஸ்குமார் சத்தியபாமா சிறப்பு விருந்தினராகவும் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி கௌரவ விருந்தினராகவும் கலந்துகொள்வர்.

வெளியீட்டுரையை தீபச்செல்வனும் மதிப்பீட்டுரையை கோகிலவாணியும் (சுகன்ஜா) வழங்க, ஏற்புரையையும் நன்றியுரையை நூலாசிரியர் வெற்றிச் செல்வி வழங்குவார்.
வெற்றிச்செல்வியின் -தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி- நூல் வெளியீடு! Reviewed by NEWMANNAR on June 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.