ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்...
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.
28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறலாமா? வேண்டமா? என்பது குறித்து, பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டாம் என பல்வேறு நாடுகளின் தலைவர்களும், முதலீட்டாளர்களும், நிறுவன அதிபர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறினால், ஐரோப்பிய பகுதியில் அதன் அதிகாரம் குறைந்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடேயே, ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதற்கு குறைந்த அளவே ஆதரவு உள்ளது என்று கருத்துக் கணிப்பு தகவல் ஒன்று வெளியானது.
அதையடுத்து, உடனடியாக தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய பிரிட்டன் அதிபர் டேவிட் கேமரூன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை ஆதரித்து வாக்களிக்க வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தால், நீங்கள் மட்டுமின்றி, உங்களது எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவீர்கள் என்றும் கேமரூன் எச்சரித்தார்.
அதேவேளை பிரிட்டன் பிரதமருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இலங்கையிலிருந்து அமைச்சர்கள் உட்பட ஐந்து அரசியல் வாதிகள் அந்நாட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,
- Dina Mani
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்...
Reviewed by Author
on
June 22, 2016
Rating:
Reviewed by Author
on
June 22, 2016
Rating:


No comments:
Post a Comment