மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி .... அர்ஜென்டினா சாம்பியன்...
மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் அர்ஜென்டினா அணி தோற்கடித்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பையில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெருமையை அர்ஜென்டினா அணி பெற்றது.
கோபா அமெரிக்க கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினா அணி கோப்பையை தவறவிட, மகளிர் ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.
மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி .... அர்ஜென்டினா சாம்பியன்...
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment