அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (05-07-2016) கேள்வி பதில்

கேள்வி:−
                மதிப்பிற்குரிய சட்டத்தரணி SuthanLaw அண்ணா! நான் மட்டக்களப்பு பாலமீன்மடுவில் இருக்கிறேன்.அண்ணா! கோபம் எனக்கு அதிகமாக வருக்கிறது. நான் அடிக்கடி பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் கோபப்பட்டு பேசி விடுகிறேன். பிறகு வருந்துகிறேன். இதனை தவிர்ப்பதற்கு என்ன செய்வது அண்ணா?

பதில் :-
                அன்பான சகோதரியே! கோபம் என்பது ஒருவருடைய "விருப்பம/எதிர்பார்ப்பு"அடைந்து கொள்ளப்படாது,மறுக்கப்படும் போதே கோபம் தோன்ற காரணமாகும்.அந்த விருப்பம்/எதிர்பார்ப்பு அடைந்து கொள்ளப்படுமாயின் கோபம் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.எனவே அந்த விருப்பத்தினை அடைந்து கொள்ள முயற்ச்சியுங்கள்.

பதட்டம் ( Tension ) மேலோங்குமாயின் கோபம் வர வாய்புள்ளது.அத்தகைய கோபமே ஒருவரை கொடூரமான குற்றம் புரிய வைக்கிறது.பயங்கரமான குற்றங்கள் புரிந்தவர்களை ஆய்வு செய்த போது இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
பதட்டம் இருவகை உண்டு.கவலை, பயம் போன்றவற்றின் போது வருவது எதிர்மறையான பதட்டம்(Negative tension),அளவற்ற மகிழ்ச்சியில் உண்டாவது நேரான/சாதகமான பதட்டம்(Positive Tension) ஆகவே கோபம் என்பது காரணி ( Cause ) பதட்டம் என்பது விளைவு (Effect). நாம் ‘ என்னை கோபமூட்டாதே, டென்ஷன் பண்ணாதே’ என்ற வார்த்தைகளை, ஒரே பொருள்பட உபயோகிக்கிறோம்.எனினும் கோபத்திற்கும் பதட்டத்துக்கும் வித்தியாசமுண்டு.
சகோதரியே மனிதனுக்கு கோபமானது அவனது அறிவு,சுயகெளரவம்,மரியாதை என்பன இல்லாதொழியும் போதே தோண்றுகிறது.அதனால் அவற்றை(அறிவு,மரியாதை,சுய கெளரவம்) மனிதனானவன் பெருக்கி கொள்ளுவதன் மூலமாக அவனது கோபத்தினை நீக்கி கொள்ள முடியும்.உதாரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல்,சமூக சேவையில் ஈடுபடுதல்,சமூகத்தில் தனக்கென்று ஒரு நன்மதிப்பு உருவாக்குவதற்கான வழிமுறையை செய்தல்/அவ்வாறு இருப்பதாக கற்பனை செய்து அதன்படி நடத்தல்,அதிகமானவர்களின் மரியாதையை பெறுதல்..போன்ற செயற்பாட்டினை செய்வதன் மூலமாக அறிவு.மரியாதை,சுய கெளரவம் என்பன அதிகரிக்கும்.இதனால் கோபமானது குறைந்து நம்மை நாமே விரும்புகிற நிலைமை உருவாகும்.இதனை நான் எனது அனுபவத்தினுாடாக கற்றுக் கொண்டேன்.
கோபத்தை குறைக்க சில பயிற்சிகளை கூறுகிறேன்.முடிந்தவரை அவற்றை பயிற்சி செய்யுங்கள்.

1. கோபப்படும்போது அவசரப்பட்டு பேசாதீர்கள். சில நிமிடங்கள் மவுனமாக இருங்கள்.பொறுமைதான் சிறந்த ஆயுதம்.
2. பிறகு கோபப்படும் விஷயத்தை பேப்பரில் எழுதுங்கள். அதை ஒரு மணி நேரம் கழித்து படித்தால்,அந்த எழுத்துக்கள் உங்கள் கோபத்தின் உருவத்தினை வெளிப்படுத்தும்.(எழுதியதை கட்டாயம் கிழித்து எரியுங்கள்.)
3. கோபமான மனநிலையில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.குறிப்பாக பணம் கொடுக்கல், வாங்கல்,சொத்தெழுதுதல்,திருமண பந்தம்,பயணம்,உறவு..விடயத்தில் கூடாது.
4. கட்டுக்கடங்காத கோபம் வரும்போது படுத்துக் கொள்ளுங்கள்.ஆழ்ந்த மூச்சு – இழுத்து விடுதலை ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் செய்யுங்கள்.(யாரும் பார்க்க செய்யாதீர்கள்)
5.தியானம், யோகாசனம்,விரும்பிய பாடல்,காட்சி,அபிமான நபர்களுடன் பேசுதல் போன்றவை கோபத்தின் தன்மையை குறைக்கும்
6.கோபம் தணிந்தவுடன் கோபமான சூழ்நிலையை ஆராயுங்கள்.அடுத்து அதுபோன்ற சூழ்நிலை வரும்போது நிதானமாக செயல்பட தயாராகிக் கொள்ளுங்கள்.
7. பிறருடைய தவறுகளை மன்னித்தல், உயர்ந்த மனோபாவமாகும். சிறுசிறு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் மறப்பது,மனச்சுமைகளை குறைக்கும்.
8.மறுதரப்பினரின் வார்த்தைகளையும் அவரது மன உணர்வுகளையும் புரிந்துகொள்ளுங்கள், பெரும்பாலும் கோபமே வராது.(ஒருவர் மீது நமது விருப்பத்தினை 100% எதிர் பார்ப்பது தவறு)
9. உங்களுடைய மன உணர்வுகளை, ” உங்கள் செய்கையால், சொல்லால் மனம் புண்பட்டுள்ளேன்” , என்ற வார்த்தைகளில் சுமூகமாக சம்பந்தப்பட்டவரிடமே சொல்லிவிடுங்கள்.

குறிப்பு 

 சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .


இன்றைய (05-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.